மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 3 ஜூலை 2020

சர்க்கரை நோயாளிகளுக்கு சில டிப்ஸ்!

சர்க்கரை நோயாளிகளுக்கு  சில டிப்ஸ்!

சர்க்கரை என அழைக்கப்படும் நீரிழிவு பிரச்னை ஒருவருக்கு ஆரம்பித்தவுடன் எந்த ஒரு அறிகுறியையும் காட்டாது. முற்றிய நிலையில்தான் தலைசுற்றி மயக்கம் வருதல், அடிக்கடி தாகமெடுத்தல், அதீத பசி, காயங்கள், சிராய்ப்புகள் ஏற்பட்டால் எளிதில் ஆறாமல் இருப்பது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அதிகமான உடல் அசதி, உடலின் மறைவுப் பகுதிகளில் அரிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படும். ஆரோக்கியமாக இருந்தால்கூட ஒருவர் வருடத்திற்கு ஒருமுறை நீரிழிவுக்கான பரிசோதனை செய்துகொள்வது நல்லது. 35 வயதை தாண்டியவர்கள் கண்டிப்பாக வருடம் ஒருமுறையோ அல்லது இருமுறையோ ரத்த சர்க்கரையின் அளவை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பரம்பரையில் யாருக்காகவது இருந்தாலும் வரக்கூடிய வாய்ப்புகளும் அதிகம். அவர்களும் தகுந்த இடைவேளைகளில் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதிக எடையுள்ள குழந்தைகளை பிரசவிக்கும் தாய்மார்களுக்கும் நீரிழிவு வர வாய்ப்புகள் அதிகம். அடிக்கடி கருக்கலைப்பு ஏற்பட்டாலும் நீரழிவு ஏற்படும். நமது மக்களில் பெரும்பாலோனோர் அரிசியைத்தான் உணவாக கொள்ளுகிறார்கள். அரிசி, உருளைக்கிழங்கு போன்ற கார்போஹைட்ரேட் உணவுகள் செரிமானம் அடையும்போது எஞ்சியவை உடலில் குளுக்கோஸாக தங்கிவிடுகின்றன. எனவே, இந்த வகையான உணவுகளை குறைத்துக்கொளவதும் நல்லது. நன்றாக வசதியுள்ளவர்கள் நீரிழிவால் ஏன் பாதிக்கப்படுகிறார்கள்? என்று பிரபலமான கேள்வி ஒன்று உண்டு. வசதியுள்ளவர்கள் இஷ்டத்துக்கு நொறுக்குதீனிகளை உண்பதும், ஹோட்டலில் வாங்கி அசைவ உணவுகள், துரித உணவுகளை அதிகமாக சாப்பிடுவதும் முக்கிய காரணங்கள் ஆகும். வீட்டில் சமைத்து அளவாக சாப்பிட்டு வருபவர்களுக்கு நீரிழிவு வருவது தள்ளிப்போகும்.

நீரிழிவு பிரச்னை ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளவர்களுக்கு உடல் எடை குறையும். மெலிந்து காணப்படுவார்கள். இவர்கள் அரிசியை குறைத்துச் சாப்பிட வேண்டும். புத்துணர்வான பழங்கள், பசுமையான காய்கறிகள் ஆகியவற்றை உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும். தினமும் யோகா, மூச்சுப் பயிற்சிகள், நடைப்பயிற்சி இவற்றை நடைமுறைப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த விஷயங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருபவர்களுக்கு சர்க்கரை வரும் அபாயத்தை பெருமளவு குறைக்கலாம். நீரிழிவிற்கான அட்வான்சாக பல சிகிச்சைகள் இப்போது வந்துவிட்டன. அதனால் ஏற்கனவே நீரிழிவு உள்ளவர்கள் கவலைப்படவும் தேவையில்லை. இல்லாதவர்கள் கவனக் குறைவாகவும் இருக்கக்கூடாது. மண்ணுக்கு கீழே விளையும் காய்கறிகள், கிழங்குகளை சாப்பிடக் கூடாது. அவற்றில் குளுக்கோஸின் அளவு அதிமாக இருக்கும். நீரழிவு உள்ளவர்கள் சாப்பிடும் உணவை மூன்று வேளைக்குப் பதிலாக நான்கு, ஐந்து வேளையாக உணவை சிறிதாக பிரித்துச் சாப்பிட்டால், கணையத்துக்கு அதிக வேலை இருக்காது. சுரக்கும் இன்சுலினும் குறைவாக சுரக்கும்.

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon