மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

ஸ்மார்ட்போனுக்கு முன்பே செல்பி எடுத்த அமெரிக்கர்!

ஸ்மார்ட்போனுக்கு முன்பே செல்பி எடுத்த அமெரிக்கர்!

அமெரிக்காவை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் கடந்த 30 ஆண்டுகளாக தினமும் செல்பி எடுத்து வருகிறார்.

இன்று உலகம் முழுவதும் ‘செல்பி’ அதிகம் பிரயோகிக்கப்படும் வார்த்தையாக உள்ளது. தனிமையாக இருந்தாலும் நான்கு பேர் இணைந்தாலும் உடனடியாக”வாங்க ஒரு செல்பி எடுப்போம்” என்பதாகத்தான் இருக்கிறது.

இந்நிலையில் கார்ல் பாடன்(64) என்பவர் அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் நகரில் வசித்து வருகிறார். இவர் போஸ்டன் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

முகநூல்.டுவிட்டர், மற்றும் செல்போன்கள் போன்றவை வருவதற்கு முன்பே இவர் செல்பி எடுக்கத் தொடங்கியுள்ளார். முதன்முதலாக கடந்த 1987 பிப்., 23ல் தன்னைத்தானே புகைப்படம் எடுத்துக் கொண்டார். ஆரம்பக் காலத்தில் சாதாரணமான 35 எம்.எம். கேமராவில் டிரைபோட் மற்றும் சாதாரண வெளிச்சத்தில் செல்பி எடுத்தார். அன்று முதல் 30 ஆண்டுகளாக தொடர்ந்து தினசிரி செல்பி எடுத்தாலும், இன்னும் அவருக்கு செல்பி மீதான மோகம் குறையவில்லை.

இந்நிலையில் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் தினசரி செல்பி எடுப்பேன் என்று கார்ல் பாடன் தெரிவித்துள்ளார். இதுவரை தான் எடுத்த செல்பி புகைப்படங்களை,பாஸ்டனில் கண்காட்சியாக வைத்துள்ளார், மேலும் அவற்றை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க புகைப்படக்கலையின் முன்னோடியாக கருதப்படும் ராபர்ட் கொரனலிஸ் தான் முதல் செல்பி புகைப்படத்தை எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon