மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 7 ஜூலை 2020

பாஜக காலூன்ற முடியாது : ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

பாஜக காலூன்ற முடியாது : ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

தமிழகத்தில் பாஜக என்ன முயற்சி செய்தாலும் அவர்களால் காலூன்ற முடியாது என்று முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனியார் தொலைகாட்சிக்கு பேட்டியளித்த இளங்கோவன், "ஜல்லிக்கட்டு, வர்தா புயலின் போது ஓ.பன்னீர்செல்வம் சிறப்பாக செயல்பட்டார். பன்னீர்செல்வத்தை மாற்றி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மக்களை திசை திருப்பவே 500 டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு மூடி உள்ளது. சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தியிருக்க வேண்டும் ஆனால் சபாநாயகர் தனது கடமையை சரியாக செய்யவில்லை. பாஜக என்ன முயற்சித்தாலும் தமிழகத்தில் காலூன்ற முடியாது" என்றார். மேலும், ஜெயலலிதா மரணத்தில் சில முக்கிய கரணங்கள் மறைக்கப்படுவதாக தோன்றுகிறது என்றும் கூறினார்.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon