மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

சிறையிலிருந்து இயக்கும் சசிகலா : கிருஷ்ணசாமி

சிறையிலிருந்து  இயக்கும் சசிகலா : கிருஷ்ணசாமி

தமிழகத்தில் மக்களாட்சி அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க கோரி புதிய தமிழகம் கட்சி சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் புதிய தமிழகம் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர். திருச்சியில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

தமிழகத்தில் மக்களாட்சியை அமல்படுத்தக்கோரி புதிய தமிழகம் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் 100 இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. திருச்சியில் நடைபெறும் உண்ணாவிரதத்தில் நான் கலந்துகொண்டேன். ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழகத்தில் மக்களின் ஆதரவு பெறாதவர்கள் குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்து, 4 ஆண்டுகளில் ஒட்டுமொத்த தமிழக வளங்களையும் சூறையாட திட்டமிட்டுள்ளனர். மன்னார்குடியை மையமாக கொண்ட அந்த குடும்பம் ஒட்டுமொத்த ஆட்சியையும் கபளிகரம் செய்ய திட்டமிட்டுள்ளது. தற்போது யார் யாரோ ஆட்சி செய்கிறார்கள். பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா ஆட்சியை இயக்குகிறார். அவருக்கு ஏஜெண்டாக தினகரன் உள்ளார். 8 கோடி மக்களின் ஆதரவு இல்லாத இந்த ஆட்சி கலைக்கப்பட்டு, நியாயமான ஆட்சி அமைய சட்டமன்ற தேர்தல் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon