மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

கைகள் இல்லாமல் கின்னஸ் சாதனை படைத்த பெண்!

கைகள் இல்லாமல் கின்னஸ் சாதனை படைத்த பெண்!

'தனக்கு மட்டும் போதிய வசதிகள் சிறு வயதில் கிடைத்திருந்தால் எவ்வளவோ சாதனைகளை படைத்திருப்பேன்' என, சிலர் சொல்லக் கேட்டிருப்போம். உண்மையில், எந்த வசதியும் இல்லாதவர்கள்தான் தனது உழைப்பால் பெரும் சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார்கள் என்பது வரலாற்றுப் பக்கங்களை புரட்டிப் பார்த்தால் அறியலாம். இரண்டு கைகள் இல்லாமல் பிறந்த மெக்ஸிகோ நாட்டுப் பெண் தனது விடாமுயற்சியால் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

இரண்டு கைகள் இல்லாவிட்டால் என்ன; தன்னம்பிக்கை உள்ளது என்று நிரூபித்துள்ள மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்த அட்ரியானா ஐரீன் மாசியாஸ் ஹெர்னாண்டஸ் (Adriana Irene Macías Hernández). இவருக்கு பிறக்கும்போதே கைகள் இல்லை. ஆனாலும் தனது அன்றாட வேலைகளை கால்கள் மூலமாக செய்யப் பழகிக்கொண்டார். சமீபத்தில், கின்னஸ் ரிக்கார்டு சாதனை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஒரு நிமிடத்தில் 11 மெழுகுவர்த்திகளை தன் கால்களாலேயே பற்றவைத்து ரிக்கார்டு பிரேக் செய்துள்ளார். இதற்குமுன் அமெரிக்காவைச் சேர்ந்த அஷ்ரிதா ஃபர்மன் (Ashrita Furman) ஒரு நிமிடத்தில் 7 மெழுகுவர்த்திகளை பற்றவைத்தது முந்தைய சாதனையாக இருந்தது. தற்போது அந்தச் சாதனையை முறியடித்துள்ளார் அட்ரியானா. இவர் சட்டப் படிப்பும் முடித்துள்ளார்.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon