மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 4 ஜூலை 2020

அந்நிய நேரடி முதலீடு 18% அதிகரிப்பு!

அந்நிய நேரடி முதலீடு 18% அதிகரிப்பு!

கடந்த 2016ஆம் ஆண்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 18 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தொழிற்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய தொழிற்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியா கடந்த 2015ஆம் ஆண்டில் 39.32 பில்லியன் டாலர் அளவிலான அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்த்திருந்தது. இந்நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டில் 18 சதவிகித உயர்வுடன் 46 பில்லியன் டாலர் அளவிலான அந்நிய நேரடி முதலீடுகள் திரட்டப்பட்டுள்ளது. சேவைகள் துறை, தொலைதொடர்பு, வர்த்தகம், கம்ப்யூட்டர் ஹார்டுவேர் சாஃப்ட்வேர் மற்றும் ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறைகளில் அதிகமான முதலீடுகள் குவிந்தன.

சிங்கப்பூர், மொரீஷியஸ், ஜப்பான் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகள் இந்தியாவில் அதிகளவில் முதலீடு செய்திருக்கின்றன. இந்திய அரசு அந்நிய நேரடி முதலீடுகளை அதிகளவில் ஈர்ப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதாவது, அந்நிய நேரடி முதலீட்டு கொள்கை தாராளமயமாக்கல் மற்றும் வணிகச் சூழல் முன்னேற்றம் ஆகிய நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுள்ளது. முதலீட்டை அதிகரிக்கும்வகையில் அதிலுள்ள விதிமுறைகள் தளர்த்தப்படும் என்று பட்ஜெட் அறிக்கையில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

இந்தியாவின் உள்கட்டமைப்பு, துறைமுக மேம்பாடு, நெடுஞ்சாலைத் திட்டங்கள் ஆகியவற்றை செயல்படுத்துவதற்கு இந்தியாவுக்கு 1 லட்சம் கோடி அளவிலான முதலீடுகள் இந்தியாவுக்கு தேவைப்படுகிறது. எனவே, அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிப்பதென்பது இந்தியாவுக்கு முக்கியமான ஒன்றாகிறது.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon