அதிமுகவுக்கு திமுக மட்டுமே எதிரியாக உள்ளது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொளவதற்காக நேற்று மதுரைக்கு வந்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது,
அதிமுகவுக்கு, திமுக மட்டுமே எதிரியாக உள்ளது. ஓ.பி.எஸ்.க்கு எத்தனை மாவட்டங்களில் அதரவு தெரிவிக்கின்றனர். ஸ்டாலினுக்கு ஊதுகுழலாக ஓ.பி.எஸ் செயல்படுகிறார். ஓ.பி.எஸ்.சையோ, அவரது அணியையோ, கட்சியையோ யாரும் மதிப்பதில்லை. எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே துரோகிகள் இருந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.