மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 15 ஆக 2020

முதல்வர் பதவியை கைப்பற்றுவோம் : உத்தவ் தாக்கரே

முதல்வர் பதவியை கைப்பற்றுவோம் : உத்தவ் தாக்கரே

மும்பை மேயர் பதவி மட்டுமின்றி, முதல்வர் பதவியையும் விரைவில் கைப்பற்றுவோம் என்று உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவில் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியானதில், 10 மாநகராட்சிகளில் 8 இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளது. நாசிக், புனே, பிம்ப்ரி சிஞ்ச்வாட், அமராவதி, உல்லாஸ் நகர், அகோலா, நாகபுரி, சோலாபூர் ஆகிய 8 மாநகராட்சிகளை பாஜ கைப்பற்றியுள்ளது. தானே மாநகராட்சியில் மட்டும் சிவசேனா வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 25 மாவட்ட ஊராட்சிகளில் 9 இடங்களில் பாஜ வெற்றி பெற்றது. சிவசேனாவுக்கு 3 இடங்களும், காங்கிரசுக்கு 6 இடங்களும் கிடைத்தன. தேசியவாத காங்கிரஸ் 6 இடங்களையும், இதர கட்சி ஒரு இடத்தையும் கைப்பற்றின.

தேர்தல் முடிவுகள் குறித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே செய்தியாளர்களிடம் கூறுகையில், தொண்டர்களின் உழைப்பால்தான் இந்த வெற்றி கிடைத்துள்ளது. கூட்டணியை பற்றி நான் ஒரு போதும் கவலைப்பட்டதில்லை. சிவசேனாவை நம்பர் 1 இடத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பதுதான் ஒரே குறிக்கோள். மும்பை மேயர் பதவி எங்களுக்குத்தான். தற்போது மேயர் பதவியை பிடித்துள்ள சிவசேனா விரைவில் முதல்வர் பதவியையும் கைப்பற்றும். மாநகராட்சிகளில் பாஜ கூட்டணி குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிக்கப்படும். ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். மேயர் மட்டுமல்ல முதல்வர் பதவியையும் சிவசேனா கைப்பற்றும் என்று கூறினார்.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon