மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

இந்த வார டெக்னாலஜி உலகம்!

இந்த வார டெக்னாலஜி உலகம்!

மனிதன் தன் தேவைகளுக்காகவும், வேலைச் சுமையை குறைக்கவும், சில நேரங்களில் பொழுதுபோக்கு சாதனமாகவும் புதிதாக பல்வேறு தொழில்நுட்பங்களை கண்டறிந்து வருகிறான்.

இந்த வாரத்தில் மட்டும் பல நிறுவனங்கள் தங்கள் புதிய தொழில்நுட்பத்தை வெளியிட்ட வண்ணம் இருந்தனர். குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் இந்த வாரத்தின் தொடக்கத்தில் ஜப்பான் நாட்டில் புதிதாக அமைக்கப்பட்ட 7D தொழில்நுட்ப பூங்கா,அதற்கு போட்டியாக சீனா உருவாக்கிய காவல் ரோபோ போன்றவை சுவாரஸ்யமான கண்டுபிடிப்புகளாகவும், காண்போரை வியப்பில் ஆழ்த்தும் விதத்திலும் அமைந்தன. ஆனால் அதற்கும் மேலாக நாசா கண்டறிந்த ஒரு புதுமையான உலகினைப் பற்றிய தகவல் காட்டுத் தீயைப்போல் பரவியது. நாம் வாழும் பூமியை போல் மனிதர்கள் வேறு எங்காவது வாழ்கிறார்களா அல்லது மனிதன் பூமியை தாண்டி பிற கோள்களில் வாழும் வசதிகள் உள்ளதா என்பது பற்றிய ஆராய்ச்சிகள் பல வருடங்களாக நடைபெற்றாலும், அதுவரை எந்த கோள்களும் கண்டறியப்படவில்லை. ஆனால் அந்த புதிய கோள்களை கண்டறிந்ததும் நாசா ஆராசியாளர்கள் பலரும் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்த வாரம் சிறப்பான தொழில்நுட்ப தகவல்கள் மற்றும் விண்வெளி பற்றிய தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. அதன் தொடர்ச்சியாக நேற்று வெளியான தகவலில் புதிதாக வடிவமைத்த குவாண்டம் கணினி பற்றிய தகவலை தெரிவித்தனர். அதில் IBM நிறுவனத்துடன் போட்டியிட்டு மேரிலேண்ட் பல்கலைக்கழகம் ஒரு குவாண்டம் கணினியைத் தயாரித்து வந்ததாகவும். அதனை யார் முதலில் வடிவமைப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் IBM தான் அதனை முதலில் செய்து முடித்தது என்றும், ஆனால் பயன்பாட்டினை பார்க்கும் போது மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தின் கணினியின் பயன்பாடு சிறப்பாகவுள்ளது என்றும் தகவலை தெரிவித்தனர்.

IBM நிறுவனத்தின் கணினி 35.1 சதவிகிதம் மட்டுமே துல்லியமான தகவலை தருவதாகவும், ஆனால் மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தின் கணினி 77.1 சதவிகிதம் துல்லியமாக செயல்படுகிறது என்றும் தகவலை தெரிவித்துள்ளனர்.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon