மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

தனுஷ் கோர்ட்டுக்கு வருவாரா?

தனுஷ் கோர்ட்டுக்கு வருவாரா?

நேற்று தான் தனுஷுக்கும் சுசித்ராவுக்கும் எந்த பிரச்னையும் இல்லை என்று சுசித்ராவின் கார்த்திக், ஒரு வழியாக வாய் திறந்து பேசினார். ஆனால், அதற்குள் தனுஷைத் தேடி அடுத்த பிரச்னை வந்துவிட்டது.

தனுஷ் தங்களது மகன் என்று மதுரை மேலூரிலிருந்து குரலெழுப்பிய கதிரேசன் - மீனாக்‌ஷி தம்பதியினரின் கோரிக்கைக்கு செவி சாய்த்திருக்கிறது மதுரையிலிருக்கும் சென்னை உயர்நீதிமன்றக் கிளை. வருகிற 28ஆம் தேதி மதுரை கோர்ட்டில் தனுஷ் ஆஜராக வேண்டும். அங்கே அவரிடம், கதிரேசன் - மீனாக்‌ஷி தம்பதியினர் சொல்லும் அங்க அடையாளங்கள் இருக்கின்றனவா? என்று நீதிமன்றத்தின் மூலம் அடையாளங்கள் சரிபார்க்கப்படும். இதனடிப்படையில் தான் தனுஷ் கதிரேசன் - மீனாக்‌ஷி தம்பதியினரின் மகனா இல்லையா? என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும்.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon