தமிழக உளவுத்துறை ஐ.ஜி,யாக இருந்த சத்யமூர்த்தி விடுப்பில் போனார், அதன் பிறகு பிப்ரவரி 12ஆம் தேதி இரவே அவசரமாக டேவிட்சன் தேவாசீர்வாதம் உளவுத்துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார். பணியில் அமர்ந்த பத்தே நாளில் அவர் வெல்பர் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதையடுத்து, கடந்த இரண்டு நாட்களாக உளவுத்துறை ஐ.ஜி. இடம் காலியாக உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தனக்கு நம்பிக்கையான சத்தியமூர்த்தியை கொண்டுவர முயற்சித்துள்ளார். அதுக்கு அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவும், திவாகரும் மறுப்பு தெரிவித்துள்ளார்கள்.
இந்த பிரச்னையால் உளவுத்துறை ஐ.ஜி. பதவிக்கு வருவதற்கு பலரும் தயங்குகிறார்களாம், காரணம் டி.எஸ்.ஆர், ரிப்போர்ட்களை வழக்கமாக முதல்வர் பார்வைக்குதான் அனுப்பவேண்டும். இப்போது சசிகலா பார்வைக்கும் கொடுக்கவேண்டும் என்பதால், உளவுத்துறை ஐ.ஜி பொறுப்புக்கு வருவதற்கு தாமரைகண்ணன் விருப்பபடவில்லையாம். செந்தாமரைகண்ணன் பெயரும் சைலான்டாகி விட்டதாம். தற்போது சிட்டியில் கூடுதல் ஆணையராக இருக்கும் ஶ்ரீதர் பெயர்தான் ஓங்கியிருக்காம். அதில் முதல்வர் விருப்பம் இல்லாமல் இருகிறாராம். தற்போது கூடுதல் பொறுப்பு பார்க்கும் க்யூ பிரிவு ஐ.ஜி, ஈஸ்வரமூர்த்தி பார்த்தாலும் சரியாக இருக்கும், நேர்மையாக இருக்கும் என்று ஃபீல் செய்கிறாராம் முதல்வர்.