மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

புதிய தேருக்காக 180 வருட தேரை எரித்த நபர்!

புதிய தேருக்காக 180 வருட தேரை எரித்த நபர்!

கர்நாடகாவில் புதிய தேர் வேண்டும் என்பதற்காக, 180 வருட பழமையான தேரை தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமையன்று சாமராஜா நகரிலுள்ள சாமராஜேஷ்வரா கோயில் உள்ள 180 வருட பழமையான தேர் ஒன்று தீயில் இரையானது. இது மக்களிடையே பெரும் மோதல்களை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் வேண்டுமென்றே செய்யப்பட்டுள்ளது என்பது போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சாமராஜா நகர் காவல்நிலைய போலீஸார், தேருக்கு தீ வைத்த மோகன்குமார் என்பவரை கைது செய்தனர். ஆனால் இந்தச் சம்பவத்துக்கு அவர் கூறிய காரணம் அனைவருக்கும் அதிர்ச்சியளித்தது.

35 வயதான மோகன், இந்தக் கோயிலுக்கு புதிய தேர் வேண்டும் என்பதற்காக பழைய தேரை எரித்தேன் எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரிடம் மேலும் விசாரணை நடத்தியபோது, கடந்த ஆண்டு மாநில அரசு இந்த கோயில் நலத் திட்டங்களுக்காக இரண்டு கோடி வழங்கியது. மேலும் கடந்த ஏழு வருடங்களாக புதிய தேர் வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டபோதும் அதற்கு எந்தவித பதிலும் கிடைக்கவில்லை.

இதனால், விரக்தியடைந்த மோகனுக்கு 180 ஆண்டு பழமைவாய்ந்த தேரை மாற்றுவதற்கான ஒரு திட்டம் தோன்றியுள்ளது. இதைத் தொடர்ந்து, சனிக்கிழமை இரவு தேர் நின்றுகொண்டிருந்த இடத்தில் தென்னங்கீற்றுகளை வைத்து தீ வைத்துள்ளார். தென்னங்கீற்று காய்ந்து இருந்ததால் தீ மடமடவென பிடித்து தேர் முழுவதும் பரவி சாம்பாலானது.

வருகிற திருவிழாவுக்கு என் மக்களுக்கு புதிய தேர் கொடுக்க வேண்டும் என்பதற்காக இதைச் செய்தேன் என மோகன்குமார் தெரிவித்துள்ளார்.

தனது குற்றத்திற்கு அவர் அளித்த காரணம் போலீஸார் உள்பட அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon