மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 16 டிச 2019

ஆசிரியர்கள் வாட்ஸ் அப் பயன்படுத்த தடை!

ஆசிரியர்கள் வாட்ஸ் அப் பயன்படுத்த தடை!

பொதுத் தேர்வுகளை முன்னிட்டு ஆசிரியர்கள் வாட்ஸ் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத் தேர்வு மார்ச் 2ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு, மார்ச் 8ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையும் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், பிளஸ்-2 பொதுத் தேர்வில் எந்தவித முறைகேடுகளும் நடக்காமல் தவிர்ப்பதற்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக ஆசிரியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளும் தேர்வு நாட்களில் வாட்ஸ் அப் பயன்படுத்தக்கூடாது என, தடை விதிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக, வாட்ஸ் அப் மூலம் தேர்வு வினாத்தாள்களும் விடைத்தாள்களும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon