மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 4 ஜூலை 2020

ஏர்டெல் : 100 ரூபாய்க்கு 10 ஜிபி டேட்டா!

ஏர்டெல் : 100 ரூபாய்க்கு 10 ஜிபி டேட்டா!

ரிலையன்ஸ் ஜியோவுடனான தனது போட்டியை அதிகரிக்கும்விதமாக, தனது வாடிக்கையாளர்கள் பயன்பெறும்வகையில் 100 ரூபாய்க்கு 10 ஜி.பி. 3ஜி/4ஜி டேட்டா வழங்கும் புதிய திட்டத்தை ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி, சில தினங்களுக்குமுன்பு ஜியோ பிரைம் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன்படி, ஜியோ பிரைம் வாடிக்கையாளர்கள் மிகக் குறைந்த கட்டணத்தில் அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ் கால்ஸ், வீடியோ கால்ஸ் உள்ளிட்ட சலுகைகள் இத்திட்டத்தில் வழங்கப்படுவதாக அறிவித்தார். ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பையடுத்து, மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களும் போட்டி போட்டிக்கொண்டு சலுகைகளை அறிவித்து வருகின்றன.

அந்தவகையில் ஏர்டெல் நிறுவனம், 3ஜி அல்லது 4 ஜி போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்கள் ரூ.100 கட்டணத்தில் கூடுதலாக 10 ஜிபி டேட்டாக்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இது புதிய சலுகை இல்லை எனவும், ஏற்கனவே இருக்கும் திட்டத்தில் கூடுதலாக ரூ.100 சேர்த்து ரீசார்ஜ் செய்வதன்மூலம் இச்சலுகையைப் பெறலாம் எனவும் ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த 10 ஜிபி டேட்டா ரீசார்ஜ் செய்த அடுத்த 28 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon