மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 5 ஜுன் 2020

அந்த மனசுதான் சார் கடவுள் - அப்டேட் குமாரு

அந்த மனசுதான் சார் கடவுள் - அப்டேட் குமாரு

இங்க ஒவ்வொருத்தரும் வாட்ஸப் காண்டாக்டை காணும்னு தவிச்சிக்கிட்டு கெடக்காங்க. இது சிவன் நெத்தில மூணாவது கண்ணைக் காணோமாம். சாயங்காலம் ஆச்சுன்னா தீபா பிரஸ் மீட் குடுக்குறா மாதிரி, கோபம் வந்தா சிவன் கண்ணும் வரும். கடவுள் எங்க இருக்காருன்னு தேடுறவங்களுக்கு ஒவ்வொரு அப்டேட்லயும் கடவுள் யாருன்னு பிராக்கெட் போட்டு காட்டியிருக்கேன்... அப்டேட்டைப் பாருங்க.

//Boobathi Kalaivanan

அதிமுக-வை காப்பாற்ற 1000 தொண்டர்களை வழங்கிய மேதகு வைகோ அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்//(அந்த மனசுதான் சார் கடவுள்)

//கமல் கண்ணன்

அந்த 500 லிஸ்ட்ல நம்ம ஊரும் இருக்கான்னு ஒவ்வொருத்தரும் தேடினாங்க பாருங்க// (அந்த மனசுதான் சார் கடவுள்)

//Christilda N Pandiyan

கடைசில பாத்திமா பாபு ஓ.பி.எஸ். அணியில சேந்ததுதான் .....

பிரேக்கிங்_நியூஸ்// (அந்த மனசுதான் சார் கடவுள்)

//Puthiya Parithi

நீ யார்னு எனக்குத் தெரியாது...நான் யார்னு உனக்குத் தெரியாது. நாம ரெண்டு பேரும் யாருன்னு ஊருக்கே தெரியாது. அதனால் Date பண்ணலாம் வா..// (இந்த மனசுதான் சார் கடவுள்)

//Prabhakaran Balakrishnan

என்னதான் ஸ்பின்னரா இருந்தாலும் ஒரு ஸ்பெல்லுக்கு 16 ஓவரெல்லாம் அதிகம். இதெல்லாம் மனித வதையில் வராதா?// (பௌலிங் போட்ட அந்த மனசுதான் சார் கடவுள்)

//Anand Kali

புரட்சித்தலைவி தன் வாழ்நாளில் எல்லா எதிரிகளையும் நேருக்கு நேர் சந்தித்தார். ஆனால் துரோகிகள் அவர் முதுகுக்கு பின்னாலே இருந்திருக்கின்றனர்.// (அந்த மனசுதான் சார் சாத்தான்)

//Ravi Shankar

ஜெயலலிதா மேல என்ன கோவத்துல இருக்கானுங்கன்னு தெரியல,

அந்தம்மா பிறந்தநாள் அதுவுமா,

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்,

திருட்டை ஒழிக்க முடியாதுன்னு

அந்தம்மா கட்சிக்காரனுங்களே

பாட்டு போட்டு குத்திக் காட்டிட்டு இருக்காய்ங்க. //(அந்த மனசுதான் சார் கடவுள்)

//Mani Dhanuskodi

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் பாடமாக வையுங்கள்!

ஒரு அரசியல்வாதி எப்படி எல்லாம் வாழக்கூடாது என்று வருங்கால சந்ததியினருக்கு பாடமாய்!// (அந்த பாடம்தான் சார் கடவுள்)

//ஹரி. ஜெ

மதிமுக-வினர் 1000 பேர் பன்னீர்செல்வம் அணியில் இணைந்தனர்...

வைகோ: இந்த 1000 பேர் இவ்ளோ நாள் கட்சில் எங்க இருந்தானுங்க....

தளபதி: இந்த 1000 பேர் எப்படி மிஸ் ஆன்னானுங்க.// (இந்த மனசுதான் சார் கடவுள்)

//Chozha Rajan

நிமிடத்துக்கு 60 வார்த்தைகள் வீதம் நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் டைப் செய்தால்....

நமது மரபணு தொகுதி முழுவதையும் டைப் செய்து முடிக்க 50 ஆண்டுகள் ஆகுமாம்...// (அந்த மரபணுதான் சார் கடவுள்)

//சிவா சுப்பிரமணி

காலேஜ் விடற டைம்ல லோக்கல் ட்ரெய்ன்ல டிக்கெட் இல்லாம போறது ரொம்ப கஷ்டம் 😢

ஐ.டி. கார்டோட யாரப்பாத்தாலும் பீதியாகுது// (அந்த மனசுதான் சார் சாத்தான்)

//பெ. கருணாகரன்

மத நம்பிக்கையாளர்களுக்கு

இன்று சிவராத்திரியாம்...

மதத்தின் மீது நம்பிக்கை இல்லாத நம் போன்ற

காதல் நம்பிக்கையாளர்களுக்கு

தினமும் சிவராத்திரிதான்.

வா... இன்று நன்குறங்கி ஓய்வெடுப்போம்:)

வெயிலு கவுஜகள்...// (அந்த மனசுதான் சார் கடவுள்)

//Inigo Pious

ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக போராடுபவர்கள் தேச விரோதிகள் - எச்.ராஜா

அப்ப தேச பக்தாஸ் அதிகமா இருக்குற குஜராத், ராஜஸ்தான்ல அத நொட்ட வேண்டியதான.// (அந்த மனசுதான் சார் கடவுள்)

//Inigo Pious

ஜெயாவை ஏமாற்றி சசிகலா ஊழல் செய்தார்...

அப்போ ஜெயா நிர்வாக திறமை இல்லாதவரா...

இல்லை இல்லை ஜெயாவை சசி மிரட்டியுள்ளார்

அப்போ ஜெயா கோழை, தைரியமில்லாதவர்...

அப்படி இல்ல ஜெயாவை ஏமாற்றி சசிகலா ஊழல் செய்தார்...

டாய் சாம்பு மவனே....கொண்டய மறைடா...// (அந்த மனசுதான் சார் கடவுள்)

//shyam sundar

‘அந்த சிவன் கண்ணை திறந்து பாத்தாரு நான் பாத்தேன்னு' ஒரு குருப் நாளைக்கு கிளம்பும் பாருங்களேன்.// (அந்த மனசுதான் சார் கடவுள்)

//shyam sundar

இன்று காலை கோடம்பாக்கம் பாலத்திற்கு அடியில் கடவுளைப் பார்த்தேன். முதுகில் பெரிய பையை மாட்டிக்கொண்டு கோல்ட் பில்டர் குடித்துக் கொண்டிருந்தார். மாலை ஆபிசில் இருந்து வீடு திரும்பும்போது வடபழனியில் மறுபடியும் அதே கடவுளைப் பார்த்தேன். பேட் மேன் டீ சர்ட்டுடன் கோவில் பக்கத்தில் நின்று பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்.// (அந்த பிச்சைக்காரர்தான் சார் கடவுள்)

-லாக் ஆஃப்

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon