மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 15 ஆக 2020

சட்டசபையில் நடந்த நாடகம் : பிரமேலதா

சட்டசபையில் நடந்த நாடகம் : பிரமேலதா

ஈஷா யோக மையம் சார்பில் நடைபெறும் ஆதியோகி சிவன் சிலை திறப்பு விழா நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார். மேலும் தமிழக முதலமைச்சர் பழனிச்சாமியும் கலந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சியில், தேமுதிக கட்சியின் மகளிரணி தலைவர் பிரேமலதாவும் கலந்துகொள்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த பிரமேலதா கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதாவது: சிலை அமைப்பதற்கு முதலில் அனுமதி அளிக்கப்பட்டபின் தற்போது தடை கோருவது சரி அல்ல. வருடத்தில் ஒருமுறை நடைபெறும் மகாசிவராத்திரி விழாவில் கலந்து கொள்வதற்காக வந்திருக்கிறோம். சட்டப்பேரவையில் நடந்தது நாடகம். நிலையான அரசாங்கம் இல்லை. நிலையான ஆளுநர் இல்லை. உள்ளாட்சி அமைப்பு இல்லை. உள்ளாட்சித் தேர்தலுக்கு தேமுதிக தயாராகி வருகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தேமுதிக ஊக்குவிக்காது. நல்ல தலைவர் வர வேண்டும், நல்ல ஆட்சி வர வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள். யார் நல்ல தலைவர் என்பதை மக்கள் புரிந்துகொண்டு வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon