மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 18 ஜன 2020

சிவனுக்கு நூதன காணிக்கை செலுத்திய மக்கள்!

சிவனுக்கு நூதன காணிக்கை செலுத்திய மக்கள்!

மஹா சிவராத்திரியை முன்னிட்டு, நாடெங்கும் பக்தர்கள் சிவன் கோயில்களில் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் சம்பலில் உள்ள பாடலேஸ்வர் கோயிலுக்கு பக்தர்கள் துடைப்பங்களை காணிக்கையாக வழங்குகின்றனர்.

பொதுவாக, பக்தர்கள் சிவனுக்கு வில்வ இலைகள், நீர் மற்றும் பசும் பால் உள்ளிட்டவற்றை செலுத்துவது வழக்கம். ஆனால் பாடலேஸ்வர் கோயிலில் சிவனின் அருளைப் பெற பக்தர்கள் துடைப்பத்தை செலுத்துகின்றனர். இது பெரும்பாலான மக்களுக்கு விநோதமாக இருந்தாலும், துடைப்பங்களை காணிக்கையாக அளிப்பதன்மூலம் தோல் தொடர்பான நோய்களை குணப்படுத்த முடியும் என சம்பல் மாவட்ட மக்கள் நம்புகின்றனர். மேலும் தோல் நோய்களிலிருந்து குணமடைந்தவர்களும் உற்சாகமாக சிவனுக்கு துடைப்பத்தை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து கோயில் நிர்வாகிகள், “ உண்மையான பக்தியுடன் அளிக்கப்படும் எந்தப் பொருளையும் இறைவன் ஏற்றுக்கொள்வார் என்ற ஐதீகத்தின் அடிப்படையில், துடைப்பம் காணிக்கை அளிப்பது வழக்கமாக உள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon