மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 14 ஆக 2020

ஓ.பி.எஸ். அணியில் இணைந்த மதிமுக-வினர்!

ஓ.பி.எஸ். அணியில் இணைந்த மதிமுக-வினர்!

ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாளான இன்று, மதிமுக-வில் இருந்து 1000 பேர் விலகி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்தனர்.

ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாளான இன்று, அதிமுக பேச்சாளர் பாத்திமா பாபு உட்பட ஆயிரம் மதிமுக தொண்டர்கள், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியில் இணைந்தனர். தமிழக அரசியல் சூழல் குறித்து மதிமுக தலைவர் வைகோ எந்தக் கருத்தும் கூறாமல் அமைதி காத்துவந்தார். இந்நிலையில், கடந்த புதன்கிழமை சட்டப்பேரவையில் திமுக நடந்துகொண்ட முறை சரியில்லை என்று விமர்சித்தார். அதிமுக-வை மற்றவர்கள் அழிக்க விடமாட்டேன் என்றும் கருத்து தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து அவரது முரண்பட்ட கருத்துகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னையைச் சேர்ந்த ஆயிரம் தொண்டர்கள், மதிமுக-வில் இருந்து விலகி ஓ.பன்னீர்செல்வம் அணியில் சேர முடிவு செய்தனர். அதன்படி, வடசென்னை மாவட்ட மதிமுக பொருளாளர் வழக்கறிஞர் எம்.எம்.கோபி தலைமையில் 11 வட்டச் செயலாளர்கள், 30 நிர்வாகிகள் உள்பட ஆயிரம்பேர் பன்னீர்செல்வம் அணியில் இன்று இணைந்தனர்.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon