மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 6 ஜூலை 2020

டிஸ்னி தயாரித்த ஆஸ்கர் மீம்ஸ்!

டிஸ்னி தயாரித்த ஆஸ்கர் மீம்ஸ்!

அனிமேஷன் கதாபாத்திரங்கள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் டிஸ்னி. கடந்த 1964ஆம் ஆண்டு முதல் டிஸ்னி நிறுவனத்தின் பல்வேறு அனிமேஷன் திரைப்படங்கள் ஆஸ்கர் பரிசைப் பெற்றுள்ளன. அதன்படி, இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலில், டிஸ்னியின் இரண்டு திரைப்படங்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளன. வரும் 27ஆம் தேதி நடைபெறவிருக்கும் 89ஆவது ஆஸ்கர் விழாவில் சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கான விருதை யார் பெறுவார்கள் என்ற குழப்பமும் பல்வேறு கருத்துகளும் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் டிஸ்னி நிறுவனம் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டது. அதில், தற்போது ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட திரைப்படங்களின் போஸ்டர்களை, டிஸ்னியின் ஜூடோபியா அனிமேஷன் கதாபாத்திரம் கொண்டு வடிவமைத்து வெளியிட்டுள்ளனர். மீம் கிரியேட்டர்கள் செய்வதைப்போல் இந்த போஸ்டர்களை தயாரித்து வெளியிட்டுள்ளனர்.

காண்பதற்கு கேலி செய்வதைப்போல் தோன்றினாலும், இதன்மூலம் டிஸ்னியின் ஜூடோபியா திரைப்படத்தின் கதாபாத்திரம் மக்களின் மனதில் இடம்பிடித்து வருகிறது என்பதே உண்மை. ஆஸ்கர் விருதை இந்த திரைப்படம் பெறாமல் போனாலும், இந்த போஸ்டர்கள் வெளியானதால் அந்த திரைப்படத்தை பெரும்பாலான நபர்கள் இணையத்தில் தேடி பதிவிறக்கம் செய்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்கள் வெளியிட்ட போஸ்டர்கள்

florence foster jenkins =Frou Frou Foxter Jenkins

nocturnal animals = Nocturnal Mammals

fantastic beasts and where to find them = Fantastic Cheetahs and Where to Find Them

hacksaw ridge = Hogsaw Ridge

hell or high water= Hell or High Otter

la la land = La La Lamb

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon