மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 5 ஏப் 2020

இன்ஃபோசிஸ் செயலதிகாரிக்கு ஊதிய உயர்வு!

இன்ஃபோசிஸ் செயலதிகாரிக்கு ஊதிய உயர்வு!

இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி பிரவின் ராவின் ஊதிய உயர்வுக்கு அந்நிறுவன நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸின் தலைமை செயலதிகாரியாகவும், நிறுவனத்தின் நிரந்தர இயக்குநராகவும் பிரவின் ராவ் உள்ளார். இவரது சம்பளத்தை உயர்த்த அந்நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு நேற்றைய பங்குச் சந்தையில் வெளியிடப்பட்டது.

2015-16 நிலவரப்படி, பிரவின் ராவின் ஊதியமானது, நிலையான ஊதியமாக (fixed salary) ரூ.3.87 கோடி, மாறுபடும் ஊதியமாக (variable pay) ரூ.5.68 கோடி என, மொத்தமாக ரூ.9.28 கோடியாக உள்ளது. ஊதிய உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது நிலையான ஊதியம் ரூ.4.62 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரம், மாறுபடும் ஊதியம் ஏற்கனவே இருந்த ரூ.3.87 கோடியாகவே உள்ளது. இந்த ஊதிய ஊயர்வு கடந்த நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படவிருக்கிறது.

மேலும் நிறுவனத்தின் நியமனம் மற்றும் ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி, இணை இயக்குநராக நியமிக்கப்பட்ட டி.என்.பிரகலாத்தை தன்னிச்சை இயக்குநராக நியமிக்க பங்குதாரார்களிடம் கருத்து கேட்கப்பட்டது. பிரகலாத் கடந்த ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதியன்று நிறுவனத்தின் இணை இயக்குநராக நிர்வாகக் குழுவால் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon