மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 15 ஆக 2020

இந்திய அணியின் பாதை வெற்றியா? தோல்வியா?

இந்திய அணியின் பாதை வெற்றியா? தோல்வியா?

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நேற்று தொடங்கிய முதல் போட்டியில் முதல் நாள் ஆட்டமுடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் சேர்த்திருந்தது. அதைத் தொடர்ந்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் போட்டியில் கடைசி விக்கெட்டையும் இழந்து 260 ரன்கள் எடுத்திருந்தது ஆஸ்திரேலிய அணி. அதன்பின்னர் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 105 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இந்திய அணி 40 ஓவர்கள் மட்டுமே விளையாடியது. அதில் 13 ஓவர்கள் வீசிய ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஓ.கீஃப் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் மார்ஸ், அஸ்வின் சுழலில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலிய அணி முதலில் தடுமாறியது. ஆனால் கேப்டன் ஸ்மித் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை எடுத்துள்ளது. சிறப்பாகப் பந்துவீசிய அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இன்னும் 3 நாட்கள் மீதமுள்ளநிலையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வெற்றிபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon