மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 7 ஆக 2020

இந்துத்வா-க்கு ஆதரவு : சுப்பிரமணியன் சுவாமி

இந்துத்வா-க்கு ஆதரவு : சுப்பிரமணியன் சுவாமி

மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தல்களில் பாஜக வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து, “பாஜக-வும் சிவசேனாவும் இந்துத்வா சகோதரர்களாக ஒன்றுகூட வேண்டும்” என ட்விட்டரில் சுப்பிரமணியன் சுவாமி எழுதியிருக்கிறார்.

உத்தரப்பிரதேச தேர்தல்களில் வெற்றி பெற இருக்கும் ஒரே வாய்ப்பு இந்துத்வா பிரச்சாரம் எனவும் கூறியிருக்கிறார். "இதே இந்துத்வா பிரச்சாரத்தை உத்தரப்பிரதேசத்தில் செயல்படுத்திக்கொண்டே இருந்தால், பாஜக அங்கே பெரும்பான்மை பெறும். மேற்குமயமாகியிருக்கும் மும்பையில்கூட இந்துத்வாவிற்கு 90% சீட்டுகள் கிடைத்திருக்கிறது” எனவும் ட்வீட் வெளியிட்டிருக்கிறார். பாஜக மற்றும் சிவசேனாவிற்கு இடையே ஏற்பட்டிருக்கும் பிளவுகுறித்தே சுப்பிரமணியன் சுவாமி இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பதாக நம்பப்படுகிறது.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon