மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 15 ஆக 2020

சிரியாவில் கார் வெடிகுண்டு தாக்குதல்!

சிரியாவில் கார் வெடிகுண்டு தாக்குதல்!

ஐ.எஸ் போராளிகளுக்கு எதிராக சிரிய போராளிகள் தாக்குதல்கள் நடத்திக் கொண்டிருக்கும் அல்-பாப் பகுதி அருகே இருக்கும் கிராமத்தில், கார் குண்டு தாக்குதலில் 45 பேர் மரணித்தனர்.

ஃப்ரீ சிரியன் ஆர்மியின் போராளிகள் சூழ்ந்திருக்கும் சோதனை சாவடி ஒன்றை குறி வைத்தே தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அல் - பாப் நகரின் வட மேற்கு பகுதியில் இருக்கும் சூசியன் கிராமத்தில், குடிமக்கள் நிறைந்திருந்த பகுதியில் தாக்குதல் நடந்திருக்கிறது. துருக்கி படைகளின் உதவியோடு அல்- பாப் நகரில் இருந்து ஐ.எஸ் படைகளை விரட்டியது ஃப்ரீ சிரியன் ஆர்மி. வடமேற்கு சிரியாவில் ஐ.எஸ் பலமாக காலூன்றியிருந்த பகுதி இதுவாகும்.அல்-ஜசீராவின் ஆண்ட்ரூ சிம்மன்ஸ், சிரியா - துருக்கி எல்லையில் இருந்து செய்தி சேகரித்து அளிக்கிறார். அவர், அல் - பாப் நகரில் இருந்து பத்து கிமீ தொலைவில் இந்த தாக்குதல் நடந்ததாக கூறுகிறார். ஆம்புலான்சியர்ஸ் சான்ஸ் ஃபிராண்டியர்ஸ் எனும் மருத்துவ தொண்டு நிறுவனம், 45 மக்கள் உயிரிழந்ததாகவும், வேறு 70 பேர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. இந்த தாக்குதல், மீண்டும் திரும்பி வருவோம் என ஐ.எஸ் சொல்வதற்காக நடத்தப்பட்டதாக இருக்கலாம்.குடிமக்கள் மீண்டும் அல்-பாப் நகருக்குள் திரும்பி செல்வது தொடர்பாக பாதுகாப்பு அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்த அலுவலகம் அருகே குண்டு வெடித்தது என சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் தெரிவித்திருக்கிறது.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon