மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 15 ஆக 2020

முருங்கை : தெரியாத பயன்கள்!

முருங்கை : தெரியாத பயன்கள்!

முருங்கைக்காயும், முருங்கை கீரையும் பல்வேறு பயன்களை அளிக்கிறது என்று அறிந்திருப்போம். ஆனால் வேர் முதல் விதை வரை பல்வேறு பயன்களை அளிக்கிறது என்பதை சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதில் முக்கியப் பயன்களை பார்ப்போம்.

ஆயுர்வேத மருத்துவத்திலும் முக்கிய இடம்வகிக்கிறது முருங்கை வேர். வாய்ப்புண்ணுக்கு முருங்கை வேரை தண்ணீரில் 5 முதல் 7 நிமிடம் கொதிக்கவைத்து அந்த தண்ணீரைக் கொண்டு வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் சரியாகும்.

2007இல் கொல்கத்தாவில் நடத்திய ஆய்வு ஒன்றில், முருங்கை வேரில் கருப்பை புற்றுநோயை குணப்படுத்தும் மூலக்கூறு இருப்பதாக கண்டுபிடித்துள்ளார்கள். இதுபோல் பல ஆய்வுகள் வெளிநாடுகளிலும் முன்னரே செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. சூடானில் 2010இல் நடந்த ஆய்வின்படி, ரத்தப் புற்றுநோய்க்கும் முருங்கை வேர் நல்ல பயனளிப்பதாக கண்டுபிடித்துள்ளனர்.

இதுதவிர மலேரியா, ரத்தக் கொதிப்பு, வயிற்று உபாதைகள், ஆஸ்துமா, சர்க்கரை நோய், மகப்பேறு சமயத்தில் வெளியேறாத நஞ்சுக்கொடியை அகற்றவும் முருங்கை வேர் பயன்படுத்தப்படுவதாக அதே ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் முருங்கை வேரைப் பொடித்து குப்பியில் அடைத்து விற்கவும் செய்கிறார்கள். முருங்கை விதையிலிருந்து எண்ணெய் எடுக்கலாம். முருங்கை விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயில் முஃபா (MUFA) எனப்படும் கொழுப்பு அமிலம் அதிகம் இருப்பதால் அது உடலுக்கும் குறிப்பாக, ஈரலுக்கு மிக நல்லது. மேலும் இதில் ஒமேகா 3 அமிலமும் அதிகம் இருக்கிறது. ஆகவே, செல் உடையும் நோய்கள் (cell degeneration) வராமல் தடுக்கும். அப்படி தடுப்பதால் நமது உடலில் பல வியாதிகள் வராமல் தடுக்கப்படுகிறது.

குடிநீரில் தொற்றுக்கிருமிகளை நீக்கி சுத்தப்படுத்த முருங்கை விதை பயன்படுவதாக இந்தியாவில் 2012இன் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. மேலும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின் ஏ இரண்டும் தேவைப்படும். இந்த சத்துக்கள் இரண்டும் முருங்கை இலையில் அதிகமுள்ளன. முருங்கை இலையில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கும். முருங்கைப் பூ மற்றும் இலையில் நோய் எதிர்ப்புசக்தியை உண்டுபண்ணும் காரணிகள் அதிகமுள்ளன.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon