மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 15 ஆக 2020

சாலை விரிவாக்கப் பணிகள் : பொன்.ராதாகிருஷ்ணன்

சாலை விரிவாக்கப் பணிகள் : பொன்.ராதாகிருஷ்ணன்

சாலைப் பணிகளை செயல்படுத்துவதில் தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் சாலைப் பணிகளுக்காக மத்திய அரசு ரூ.60,000 கோடியை ஒதுக்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார். கிழக்கு கடற்கரைச் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக ரூ.10,000 கோடியை வழங்கியிருப்பதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இந்தப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என தமிழக அரசை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க உள்ளதாக மத்திய அமைச்சர் கூறியுள்ளார். ஏற்கனவே, சாலை போக்குவரத்துத் துறை அமைச்சராக அவர் இருக்கும் காரணத்தால் அவருக்கு சாலை திட்டப் பணிகள் குறித்து முழுமையாகத் தெரியும் என குறிப்பிட்டுள்ளார். இதேபோல, சாலை விரிவாக்கப் பணிகளின்போது பெரும்பாலும் சாலையோரங்களில் உள்ள கோயில்கள், குடியிருப்புகள் பாதிக்காதவண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். பொள்ளாச்சி, கோவை 4 வழிச்சாலை பணிகள் வேகமாக நடந்துவருவதாகவும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon