மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 15 ஆக 2020

சென்னை கலை இயக்க படைப்பாளிகள் வரிசை : கே.வி.ஹரிதாசன்

சென்னை கலை இயக்க படைப்பாளிகள் வரிசை : கே.வி.ஹரிதாசன்

சென்னை கலை இயக்கத்தைச் சேர்ந்த ஓவியரான கே.வி.ஹரிதாசன் 1937ஆம் ஆண்டு கேரளாவிலுள்ள கண்ணனூரில் பிறந்தார். 1958ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர் 1960-66ஆம் ஆண்டு பெயிண்டிங்கில் டிப்ளமோ முடித்தார். 1964ஆம் ஆண்டு தமிழ்நாடு அகாடமி விருதைப் பெற்றுள்ளார் கே.வி.ஹரிதாசன். 1964-77 காலகட்டங்களில் தேசிய ஓவியக் கண்காட்சியில் பங்கேற்றுள்ளார்.

1968-71 ஆகிய ஆண்டுகளில் YANTRA என்ற தொடர் ஓவியங்களை சென்னை மற்றும் புது டில்லியில் கண்காட்சிக்கு வைத்துள்ளார். 1974, 83, 88 ஆகிய ஆண்டுகளில் ரஷ்யா, ஜெர்மன், பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். 1975ஆம் ஆண்டு கேரள அகாடமியின் தங்கப் பதக்கத்தையும் இவர் பெற்றுள்ளார். Brahmasutra என்ற பெயரில் தொடர் ஓவியங்களை 1976 முதல் 1997 வரை ஆறு முறை புது டில்லியில் காட்சிக்கு வைத்துள்ளார். ஆர்ட் டிரெண்ட்ஸ் இதழில் 1979 முதல் 1985 வரை எடிட்டராகவும் கே.வி.ஹரிதாசன் பணியாற்றியுள்ளார்.

திருவனந்தபுரத்திலுள்ள நுண்கலைக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி பின், அந்தக் கல்லூரிக்கு முதல்வராகவும் ஆனார். 1981 மற்றும் 1992 ஆண்டுகளில் புது டில்லியில் நடைபெற்ற தேசியக் கண்காட்சியின் நடுவராகச் செயல்பட்டார். 1983ஆம் ஆண்டு புது டில்லியில் நடைபெற்ற நியோ-தன்ட்ரா கண்காட்சியிலும் கலந்துகொண்டுள்ளார்.

1989லிருந்து 1994 வரை புது டில்லி லலித் கலா அகாடமியின் உறுப்பினராகவும் கேரள அகாடமியின் செயல் உறுப்பினராகவும், மண்டல மையத்தின் வெளியீட்டுக் குழுவிலும் அங்கம் வகித்துள்ளார்.

இந்திய அரசின் கலாச்சாரத் துறை சார்பாக வழங்கப்படும் சீனியர் பெல்லோஷிப்பை 1992ஆம் ஆண்டு முதல் 1995 வரை பெற்றுள்ளார். 1994ஆம் ஆண்டு “Intimations on Art, Indian and Western” என்ற புத்தகத்தை பதிப்பித்துள்ளார்.

மேலும் ஓவியர் கே.வி.ஹரிதாசன், கேரள அகாடமியின் கலைக்காக வழங்கப்படும் லலித் கலா புரஸ்காரம் விருதை 2003ஆம் ஆண்டு பெற்றுள்ளார்.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon