மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 15 ஆக 2020

வாட்ஸ் அப்: அப்டேட் அலப்பறை!

வாட்ஸ் அப்: அப்டேட் அலப்பறை!

அதிகரித்து வரும் வலைதள தகவல் பரிமாற்றத்தில் முக்கியப் பங்கு வகிப்பதில் வாட்ஸ் அப் நிறுவனமும் ஒன்று. ஆனால் தகவல் பரிமாற்றம் செய்ய பாதுகாப்பு தேவை என பல தரப்பினரும் குறைகூறவே புதிய அப்டேட்டுகள் பல வந்தவண்ணம் இருந்தன. மேலும் கடந்த வாரம் வாட்ஸ் அப் நிறுவனத்தின் அப்டேட் பற்றிய தகவலை வெளியிட்டது அந்நிறுவனம். அந்த அப்டேட் இன்று வாட்ஸ் அப் நிறுவனத்தின் 8ஆம் ஆண்டு தொடக்கத்தை கொண்டாட வெளியிடவிருப்பதாகவும் தெரிவித்தனர்.

அதன்படி, இன்று காலை வெளியான புதிய அப்டேட்டில் நாம் STATUS மாற்றும் வசதிகள் நீக்கப்பட்டு புகைப்படம், வீடியோக்களுடன் ஒரு கேப்சன் சேர்த்து STATUS ஆக அப்டேட் செய்யும் வசதி மட்டுமே அதில் காண்பிக்கப்பட்டுள்ளது. அதன் பயன்பாடு நமது CONTACTஇல் இருக்கும் நபர்களைத் தவிர மற்ற நபர்கள் யாரும் நமது STATUSஐ பார்க்க முடியாது என்று வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த அப்டேட்டை பயன்படுத்திய அனைவரும் எதிர்மாறான கருத்துகளையே தெரிவித்தவண்ணம் இருக்கின்றனர்.

அதன்படி இன்று காலை எழுந்ததும் மொபைல் டேட்டாவை ஆன் செய்து வாட்ஸ் அப் சென்று புதிய அப்டேட்டை கண்டதும் பலரின் நிலை என்னவாக இருந்திருக்கும் என்பதுபற்றி இப்போது காணலாம். ஓ.கே. FRIENDSக்கு மெசேஜ் பண்ணலாம்னு CONTACT LIST தேடுனா, அது இருந்த அடையாளம்கூட இல்லாம அழிச்சிட்டாங்க. அதுதான் போய்டிச்சி சரி STATUS அப்லோடு பண்ணலாம்னு பார்த்தா புதுசா ரூல் எல்லாம் வைக்கறாங்க. எனக்கு தெரிஞ்சவங்களுக்கு மட்டும் அந்த STATUS தெரியும்னு. அட, அதுகூட மன்னிச்சிருவேன். இப்போ நான் SAVE பண்ணாத CONTACT எப்டி தேடப்போறேன்னு தெரியலையே அப்டின்னு பொலம்பற ஒரு குரூப் தனியா இருக்கு. எதுக்கு இந்த அப்டேட் நாங்களா கேட்டோம் என்பது போன்ற பல்வேறு கருத்துகளை வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர் பல்வேறு தரப்பினர். ஆனால் அதன்பின்னர், அந்த CONTACT LIST சிம்பல் இருக்கும் தகவல் வெளியாகியது. தற்போது இந்த அப்டேட் கடினமாக இருந்தாலும் பின்னர் பழகிவிடும் என்பது நிதர்சனம்.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon