மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 7 ஆக 2020

தனுஷுக்கு சம்பந்தமில்லை - சுசித்ரா கணவர் விளக்கம்!

தனுஷுக்கு சம்பந்தமில்லை - சுசித்ரா கணவர் விளக்கம்!

பாடகி சுசித்ரா, கடந்த சில தினங்களாக அவரது ட்விட்டர் அக்கவுண்ட் மூலம் நடிகர் தனுஷின் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.

‘சர்ச்சை நாயகன்’ தனுஷ் மீது சுசித்ரா புகார்!

தனுஷ் பெயரில் சர்ச்சை - சுசித்ரா கணவர் வேண்டுகோள்!

அவரது அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதா? இல்லை உண்மையில் சம்பவங்கள் ஏதும் நடைபெற்றிருக்கிறதா? என்ற தெளிவு இல்லாமல் தனுஷின் பெயர் பந்தாடப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில், சுசித்ராவின் மொபைல் ஃபோனும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. அப்போது சுசித்ராவின் கணவரான கார்த்திக்கிடம் ‘தி தமிழ் இந்து’ நாளிதழ் தொடர்புகொண்டு உண்மையைக் கேட்டபோது விரைவில் இதுபற்றி தெளிவாகப் பேசுவோம் எனக் கூறியிருந்தார். ஆனால் இரண்டு நாட்களுக்குப்பிறகு, இன்று நடிகர் கார்த்திக்கின் ஃபேஸ்புக் அக்கவுண்டில் ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறார்.

கடைசி சில நாட்கள் ஒரு குடும்பமாக நாங்கள் மிகவும் துயரத்துடன் இருந்தோம். சுச்சியின் ட்விட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டிருந்தது. இப்போது அந்த அக்கவுண்ட்டை மீட்டுவிட்டோம். கடைசி சில நாட்களாக அந்த அக்கவுண்ட்டிலிருந்து பதிவு செய்யப்பட்ட ட்வீட்கள் அனைத்தும் பொய்யானவை. அவற்றில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது தனிப்பட்ட மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன். இந்தப் பிரச்னையில் மீடியா சென்சிடிவிடியை காட்டவேண்டுமென்றும், சென்சேஷனலாக மாற்ற வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon