மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 15 ஆக 2020

இந்தியா : வேகமாக வளரும் பொருளாதாரம்!

இந்தியா : வேகமாக வளரும் பொருளாதாரம்!

2017ஆம் ஆண்டில் ஜி-20 நாடுகளின் மத்தியில் வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இந்தியா இருக்கும் என்று, மூடிஸ் முதலீட்டாளர் சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மூடிஸ் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில், ‘இந்தியாவில் கடந்த ஆண்டில் வெளியான பண மதிப்பழிப்பு நடவடிக்கை காரணமாக, நான்காம் காலாண்டில் பொருளாதாரம் சரிவடைந்தது. எனினும் 2017ஆம் ஆண்டில் முந்தைய எதிர்பார்ப்பான 7.5 சதவிகிதத்தைக் காட்டிலும் கூடுதலான வளர்ச்சியைப் பெறும். எனவே, ஜி-20 நாடுகளின் மத்தியில் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இந்தியா திகழும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ‘வர்த்தகம் மற்றும் குடியேற்றம் தொடர்பாக அமெரிக்காவின் கொள்கை வகுப்பில் ஏற்படும் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களால் சர்வதேச அளவில் நிச்சயமற்றதன்மை நிலவி வருகிறது. ஆசியாவைப் பொருத்தவரை, சீனா கடந்த 2016ஆம் ஆண்டில் அதிகாரபூர்வ வளர்ச்சி இலக்கான 6.7 சதவிகிதத்துடன் நிலையாக உள்ளது. ஆனால் 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் முறையே 6.3 சதவிகிதம் மற்றும் 6 சதவிகிதமாகக் குறையும்’ என்றும் மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon