மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 15 ஆக 2020

தேர்தலில் போட்டியிடத் தயாராகிவருகிறோம் : ஜெ.தீபா

தேர்தலில் போட்டியிடத் தயாராகிவருகிறோம் : ஜெ.தீபா

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிளந்ததையடுத்து, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியலில் இறங்க தீவிரம் காட்டிவந்தார். மேலும் தொண்டர்களின் கருத்துகளை கேட்டறிந்தபின், வரும் பிப்ரவரி 24ஆம் (இன்று) தேதி ஜெயலலிதா பிறந்த நாள் அன்று தனது அரசியல் பயணம் தொடர்பான முடிவை அறிவிப்பேன் என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று காலை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்குச் சென்ற தீபா, அவரது சமாதியில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து, தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த தீபா, ‘மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபடுவேன். அதிகாரபூர்வ அறிவிப்பை இன்று மாலை அறிவிப்பேன். டி.டி.வி.தினகரன், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தீபக் பேசியதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. தீபக்கை பின்னணியில் இருந்து யாரோ இயக்குகிறார்கள். ஆர்.கே.நகர், உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடத் தயாராகிவருகிறோம்’ என்றார். மேலும் ‘போயஸ் கார்டன் இல்லத்துக்கு நானும் தீபாவும்தான் சொந்தக்காரர்கள்’ என தீபக் கூறியதுபற்றி கருத்துத் தெரிவித்த தீபா, ‘ஜெயலலிதாவின் சொத்துகளை நான் எதிர்பார்க்கவில்லை’ எனக் கூறினார்.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon