மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 15 ஆக 2020

பதவிக்கு வராமல் கட்சியைக் காப்பாற்றுவேன் : நடராஜன்

பதவிக்கு வராமல் கட்சியைக் காப்பாற்றுவேன் : நடராஜன்

அதிமுக-வில் எந்தப் பதவிக்கும் வராமல் கட்சியைக் காப்பாற்றுவேன் என்று, சசிகலா கணவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக ஒரு குடும்பக் கட்சியாக மாறிவிட்டது என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. மேலும் தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சசிகலாவின் கணவர் நடராஜன், தாங்கள் குடும்ப ஆட்சிதான் நடத்துவோம் என்று தெரிவித்திருந்தார்.

மேலும் சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக-வின் பொதுச்செயலாளர் சசிகலா சிறைக்குச் சென்றபின் டி.டி.வி.தினகரன் துணை பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டார். தினகரன் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில், இன்று தஞ்சையில் நடந்த ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவில் பேசிய சசிகலா கணவர் நடராஜன், ‘ஜெயலலிதா புகழ் இருக்கும் வரை அதிமுக-வை யாராலும் எதுவும் செய்ய முடியாது. கட்சியில் நான் எந்தப் பதவிக்கும் வர மாட்டேன், பதவிக்கு வராமலேயே கட்சியை பாதுகாப்பேன்’ என்றார்.

மேலும் ஸ்டாலின் குறித்துப் பேசிய நடராஜன், ‘திமுக செயல் தலைவர் ஸ்டாலின் செயலற்ற தலைவராகிவிட்டார்’ என்று தெரிவித்தார்.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon