மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 12 ஆக 2020

ஏடிஎம்-மில் போலி ரூபாய் நோட்டுகள் : பாதுகாப்பாளர் கைது!

ஏடிஎம்-மில் போலி ரூபாய் நோட்டுகள் : பாதுகாப்பாளர் கைது!

டெல்லியில், குழந்தைகள் வைத்து விளையாடும் போலி ரூபாய் நோட்டுகளை ஏடிஎம் இயந்திரத்தில் வைத்த பணப் பாதுகாப்பாளர் கைது செய்யப்பட்டார்.

கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி, சங்கம் விஹாரில் இருக்கும் பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்-மில் இருந்து 8000 ரூபாய் பணத்தை ரோஹித் என்பவர் எடுத்துள்ளார். அப்போது ஏடிஎம்-மில் இருந்து விநியோகிக்கப்பட்ட நான்கு 2000 ரூபாய் நோட்டுகளும் குழந்தைகள் வைத்து விளையாடும் போலி நோட்டுகளாக இருந்தன.

அதைத் தொடர்ந்து, அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதுகுறித்து ஸ்டேட் வங்கியானது, ‘தலைமை வங்கிகளில் இருந்து கிளை வங்கிகளுக்கும், ஏடிஎம்-களுக்கும் போலி நோட்டுகள் செல்ல வாய்ப்பில்லை. அனைத்து ரூபாய் நோட்டுகளும் ஆய்வு செய்தபிறகே அனுப்பப்படுகின்றன’ என அறிக்கையில் தெரிவித்தது. இந்நிலையில், ஏடிஎம்-மில் பணம் வைக்கும் பணப் பாதுகாப்பாளர் மொஹமத் ஈஷா (27) நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த மொஹமத் ஈஷா, பிரின்க்ஸ் இந்தியா நிறுவனத்தில் பணப் பாதுகாப்பாளராக பணியாற்றி வருகிறார். போலி ரூபாய் நோட்டுகள் குறித்து போலீஸார் சிசிடிவி வீடியோ பதிவுகளை ஆய்வு செய்தனர். ஏடிஎம் மையத்தில் பணம் வைக்கும்போது அவரது முகம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. போலி ரூபாய் நோட்டுகளை வைத்தது மொஹமத் ஈஷா என்பது தெரியவந்ததைத் தொடர்ந்து போலீஸார் அவரை கைது செய்தனர்.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon