மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 7 ஆக 2020

ராகுல், சோனியாவுடன் ஸ்டாலின் சந்திப்பு!

ராகுல், சோனியாவுடன் ஸ்டாலின் சந்திப்பு!

திமுக செயல் தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியையும் ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.

முன்னதாக, தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை ஓட்டெடுப்பு விவகாரம் தொடர்பாக ஜனாதிபதியை சந்தித்து புகார் மனு அளிக்க மு.க.ஸ்டாலின் நேற்று டெல்லி சென்றிருந்தார். அதைத் தொடர்ந்து, நேற்று மாலை குடியரசுத் தலைவரை சந்தித்து மனு ஒன்றை வழங்கினார்.

இந்நிலையில், இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று நடைபெற்ற இந்தச் சந்திப்பில் ஸ்டாலினுடன் திமுக-வின் மூத்த நிர்வாகிகளான துரைமுருகன், திருச்சி சிவா, காங்கிரஸ் கட்சியின் முகுல் வாஸ்னிக், மாநில காங்.,தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் உடனிருந்தனர்.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon