மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 15 ஆக 2020

ஜெயலலிதாவுக்கு முதல்வர் மரியாதை!

ஜெயலலிதாவுக்கு முதல்வர் மரியாதை!

மறைந்த முதலமைச்சர் ஜெயலிதாவின் 69வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக தலைமைக் கழகத்தில் உள்ள அவரது திருவுருவப் படத்துக்கு தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதிமுக தலைமைக் கழகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெயலிதாவின் திருவுருவப் படத்துக்கு கழக அவைத்தலைவர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில், தலைமைக்கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது.

முன்னதாக, ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 69 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில், இன்று ரூ.13.42 கோடி மதிப்பிலான மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதல்வர் பழனிச்சாமி துவக்கிவைத்தார். சென்னை பன்னோக்கு மருத்துவமனையில் அவர் இந்தத் திட்டத்தை தொடங்கிவைத்தார். இத்திட்டத்தின் கல்வெட்டையும் அவர் திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon