மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 7 ஆக 2020

கௌதம் மேனனின் ரகசியம்!

கௌதம் மேனனின் ரகசியம்!

தனது ஒவ்வொரு திரைப்படங்களிலும் வித்தியாசமான விஷயங்களைச் செய்பவர் கௌதம் மேனன். 'நடுநிசி நாய்கள்' படத்தை பின்னணி இசையில்லாமல் படமாக்கினார். இவரது இயக்கத்தில் தற்போது இரண்டு படங்கள் வெளியாகும்நிலையில் உள்ளன.

தனுஷ் நடித்திருக்கும் 'என்னை நோக்கிப் பாயும் தோட்டா' மற்றும் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் 'துருவ நட்சத்திரம்'. இந்த இரு படங்களிலும் கௌதம் வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டார், 'என்னை நோக்கிப் பாயும் தோட்டா' படத்தின் ஒரு பாடலை வெளியிட்டுவிட்டு அதன் இசையமைப்பாளர் யார் என்பதைக் கூற மறுக்கிறார். 'துருவ நட்சத்திரம்' படத்தில் ஒவ்வொரு வித்தியாசமான போஸ்டரை வெளியிட்டு அதன்பிறகு டீசரை வெளியிட்டார். சினிமா ரசிகர்களிடம் இந்த டீசர் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, இன்று இரவு 7 மணிக்கு இந்த இரு படங்களைப் பற்றிய ஏதேனும் ஒரு தகவல் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அது, தனுஷ் படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதாகவும் இருக்கலாம் அல்லது 'துருவ நட்சத்திரம்' பற்றிய ரகசியமாகவும் இருக்கலாம்.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon