மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 15 ஆக 2020

ரசிகர்களை ஏமாற்றிய இந்திய அணி மீண்டு வருமா?

ரசிகர்களை ஏமாற்றிய இந்திய அணி மீண்டு வருமா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி புனேயில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் சேர்த்திருந்தது.நேற்றைய போட்டியில் அதிரடியாக விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் இன்று ஆட்டம் தொடங்கிய சிறுது நேரத்தில் 61 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணி 260 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதனைத் தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய விஜய் மற்றும் ராகுல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் விஜய் 10 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பின்னர் புஜாரா களமிறங்கினார்.

போட்டி நடைபெறும் மைதானம் வேகபந்து வீச்சாளர்களுக்கு சாதமாகவுள்ளது என்பதை முதல் இன்னிங்சில் உமேஷ் யாதவ் 4 விக்கேட்டுகளை கைப்பற்றியதில் இருந்து நன்கு தெரிகிறது. அதனைத் தனக்கு சாதமாக பயன்படுத்திய ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க், புஜாரா விக்கெட்டை வீழ்த்தினார். அதன் பின்னர் கேப்டன் கோலி களமிறங்க இந்திய ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அவர் நிலைத்து நின்று விளையாடுவார் என்ற நம்பிக்கையில் அனைத்து ரசிகர்களும் கோலி கோலி என கூச்சலிட, கோலியோ இரண்டாவது பந்திலேயே தனது விக்கெட்டினை பறிகொடுத்து அனைத்து ரசிகர்களையும் ஏமாற்றினார். ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை இந்திய அணி இழந்ததால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் இருந்தனர். அதற்கும் மேலாக ஒரே ஓவரில் ராகுல், ரஹானே, சஹா என மூன்று விக்கெட்டுகளையும் இந்திய அணி இழந்து ரசிகர்களின் நம்பிக்கையை நாசம் செய்தது.

தற்போது இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. நிதானமாக விளையாடிய ராகுல் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி பரிதாப நிலையில் உள்ளது.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon