மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 7 ஆக 2020

சர்வதேச பட்டியலில் டி.சி.எஸ்!

சர்வதேச பட்டியலில் டி.சி.எஸ்!

சர்வதேச பிராண்ட் மதிப்பீட்டு நிறுவனமான ‘பிராண்ட் பைனான்ஸ்’ ஐ.டி. உலகில் மதிப்புமிக்க மூன்று நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் மிகப்பெரிய ஐ.டி. நிறுவனமான டி.சி.எஸ். இடம்பெற்றுள்ளது.

ஐந்து வருடங்களுக்கு முன்பு ‘பிராண்ட் பைனான்ஸ்' நிறுவனத்தின் மதிப்புமிக்க நான்கு ஐ.டி. நிறுவனங்களின் பட்டியலில் டி.சி.எஸ். நிறுவனம் இடம்பெற்றிருந்தது. தற்போது, ஐந்து ஆண்டுகளில் இடைவிடாத உழைப்பின்மூலம் ஒரு படி முன்னேறி முதல் மூன்று இடங்களுக்குள் வந்துள்ளது.

மேலும் டி.சி.எஸ். வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அந்நிறுவனம் AA+ ரேட்டிங்குடன் ஐ.டி. துறையின் மதிப்புமிக்க பிராண்டாகத் திகழ்கிறது. டாடா குழுமத்தின் மதிப்பில் 69 சதவிகித பங்களிப்பை வழங்கும் நிறுவனமாகவும் டி.சி.எஸ். உள்ளது.

டி.சி.எஸ். நிறுவனம் கடந்த ஆண்டில் புதுமையான சந்தைப்படுத்துதல் திட்டங்களுக்காக ஐரோப்பாவில் கவுரவிக்கப்பட்டது. மேலும் அமெரிக்காவின் தலைசிறந்த 100 பிராண்ட்களில் ஒன்றாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon