மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 15 ஆக 2020

காஷ்மீரில் பெண் தீவிரவாதி சுட்டுக் கொலை!

காஷ்மீரில் பெண் தீவிரவாதி சுட்டுக் கொலை!

காஷ்மீரில் இந்திய எல்லையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவலில் ஈடுபடுகிறார்கள். அவர்களின் ஊடுருவலை எல்லை பாதுகாப்புப் படையினர் முறியடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், நேற்று இரவு காஷ்மீரின் அக்னூர் சக்டார் பகுதியில் ஒரு பெண் உள்பட 2 தீவிரவாதிகள் ஊடுருவலில் ஈடுபட்டனர். இதை எல்லை பாதுகாப்புப் படையினர் கண்காணித்து அவர்களை துப்பாக்கியால் சுட்டு எச்சரித்தனர். ஆனால் அவர்கள் இருவரும் எச்சரிப்பை மீறி தொடர்ந்து ஊடுருவலில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து, எல்லை பாதுகாப்புப் படையினர் மீண்டும் கடுமையாக துப்பாக்கியால் சுட்டனர். இதில், பெண் தீவிரவாதி ஒருவர் குண்டு பாய்ந்து அந்த இடத்திலேயே பலியானார். அவருடன் வந்த மற்றொரு தீவிரவாதி பின்வாங்கி தப்பி ஓடிவிட்டார்.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon