மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 15 ஆக 2020

கடவுள் மறுப்பாளராகவே இருந்துவிடலாம்! : போப்

கடவுள் மறுப்பாளராகவே இருந்துவிடலாம்! : போப்

இரட்டை வாழ்க்கை வாழ்வதற்குப் பதிலாக, கடவுள் மறுப்பாளராகவே இருந்துவிடலாம் என, போப் தெரிவித்திருக்கிறார்.

1.2 பில்லியன் உறுப்பினர்கள் இருக்கும் ஆலயத்தின் தலைவரான போப், வியாழன் அன்று, ‘கத்தோலிக்கராக இரட்டை வாழ்க்கை வாழ்வதைவிட கடவுள் மறுப்பாளராக இருப்பது சிறந்தது’ எனப் பேசியிருக்கிறார்.

‘ஒரு விஷயத்தை சொல்லிவிட்டு வேறொன்று செய்வது தவறு. அது இரட்டை வாழ்க்கை’ என போப் நடத்திய தனிப்பட்ட காலை பூசையில் தெரிவித்தார். ‘நான் கத்தோலிக்கர், எப்போதும் பூசைக்குச் செல்வேன், நான் இந்த அமைப்பில் இருக்கிறேன் எனச் சொல்பவர்கள் இருக்கின்றனர். இவர்களில் சிலர் ‘என் வாழ்க்கை கிறிஸ்தவமானது கிடையாது. என் ஊழியர்களுக்கு நான் முறையே ஊதியம் வழங்குவதில்லை. நான் கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக்குவேன். நான் இரட்டை வாழ்க்கை வாழ்கிறேன் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்றும் பேசினார்.

‘இப்படியான கத்தோலிக்கர்கள் பலர் இருக்கின்றனர். ‘இவரெல்லாம் கத்தோலிக்கர் என்றால், நாம் கடவுள் மறுப்பாளராக இருப்பதுவே சிறந்தது’ என, மக்கள் சொல்வதை எத்தனை முறை கேட்டிருக்கிறோம்’ என போப் ஃபிரான்சிஸ் பேசியிருக்கிறார். 2013ஆம் ஆண்டு போப் ஆண்டவராக தேர்வு செய்யப்பட்டதிலிருந்தே, கிறிஸ்தவ மதம் போதிக்கும் நெறிகளை நடைமுறையில் செயல்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தபடியே இருக்கிறார்.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon