மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 3 ஆக 2020

மும்பையில் சர்வதேச காபி, தேயிலை கண்காட்சி!

மும்பையில் சர்வதேச காபி, தேயிலை கண்காட்சி!

ஐந்தாவது சர்வதேச தேயிலை, காபி கண்காட்சி வருகிற நவம்பர் மாதம் மும்பையில் நடைபெறுகிறது.

சர்வதேச அளவில் தேயிலை, காபி உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் இந்தியா முன்னணியில் உள்ளது. இந்நிலையில், ஐந்தாவது சர்வதேச காபி, தேயிலை கண்காட்சி மும்பையில் வருகிற நவம்பர் 16ஆம் தேதி தொடங்கி 18ஆம் தேதி வரையில் மூன்று நாட்களுக்கு நடக்கிறது. இதுகுறித்து, கண்காட்சிக்கான ஆசிய இயக்குநர் பிரீதி கபாடியா கூறுகையில், ‘சர்வதேச அளவில் ஆண்டுதோறும் காபி, தேயிலை ஆகியவற்றின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. வருகிற 2021ஆம் ஆண்டில் உடனடியாக அருந்தும் பானங்களின் சந்தை மதிப்பு, 15 ஆயிரம் கோடி டாலரை எட்டும் எனத் தெரிகிறது.

தேயிலை, காபி ஆகியவற்றுக்கு இந்தியா முக்கியச் சந்தையாக திகழ்கிறது. எனவே, மும்பையில் ஐந்தாவது சர்வதேச காபி, தேயிலை கண்காட்சி, நவம்பர் மாதம் 16 முதல் 18 வரை நடக்கிறது. அதில், உள்நாடு மற்றும் எட்டு நாடுகளைச் சேர்ந்த 90க்கும் அதிகமான நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இந்த கண்காட்சியில் தேயிலை, காபி உற்பத்திக்குப் பயன்படும் நவீன தொழில்நுட்பம், இயந்திரங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்படுவதுடன், அதுகுறித்து ஆலோசனையும் நடத்தப்படும். இத்துறையில் எதிர்கால வளர்ச்சிக்கு தற்போதைய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் அவசியமாகிறது’ என்று கூறினார்.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon