மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 7 ஆக 2020

எண்ணெய்க் கசிவு : மீனவர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு!

எண்ணெய்க் கசிவு : மீனவர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு!

எண்ணூர் துறைமுகம் அருகே கடலில் எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு முதல்வர் நிவாரணம் அறிவித்துள்ளார்.

சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே இரண்டு கப்பல்கள் மோதிக்கொண்டதில், ஒரு கப்பலில் இருந்த கசடு எண்ணெய் கடலில் கசிந்தது. இதனால் கடலில் எண்ணெய்ப் படலங்கள் அதிகரித்து மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இடைக்கால நிவாரணமாக ரூ.15 கோடி ஒதுக்கப்படுகிறது. 30 ஆயிரம் மீனவர் குடும்பங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்தினருக்கும், தலா ரூ. 5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும். ரூ.75 லட்சம் மதிப்பில் எர்ணாவூர் மற்றும் நொச்சிக்குப்பத்தில் மீன் சந்தைகள் அமைக்கப்படும்’ என்று கூறியுள்ளார்.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon