மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 21 ஜன 2020

ஏ.ஆர்.முருகதாஸ் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஏ.ஆர்.முருகதாஸ் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இது மகேஷ் பாபுவின் முதல் நேரடி தமிழ்ப்படமாகும். இந்த படத்தில் ராகுல் ப்ரீத்சிங், எஸ்.ஜே.சூர்யா உள்பட பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையத்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர்பிரசாத் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை இயக்குனர் முருகதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

இந்த படம் வரும் ஜூன் மாதம் 23ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதே நாளில்தான் அஜித்தின் 'விவேகம்' ரிலீஸ் ஆக இருந்து பின்னர் அது தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ரம்ஜான் திருநாள் விடுமுறை தினத்தில் வெளியாகும் இந்த படத்திற்கு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon