மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 15 ஆக 2020

ஸ்பைஸ்ஜெட்டுக்கு போட்டியாக இண்டிகோ!

ஸ்பைஸ்ஜெட்டுக்கு போட்டியாக இண்டிகோ!

இண்டிகோ விமான நிறுவனம் ரூ.777 விமான கட்டணத்தில் புதிய சலுகைத் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. முன்னதாக ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனமும் இதேபோல 777 ரூபாயில் விமானப் பயணம் வழங்கும் திட்டத்தை அறிவித்திருந்தது.

குறைந்த கட்டணத்தில் விமானப் போக்குவரத்து சேவை வழங்கிவரும் இண்டிகோ நிறுவனம் குர்கான் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள சிறப்புத் திட்டத்தின்படி, அனைத்து பிடித்தங்களும் உட்பட ரூ.777 கட்டணத்தில் விமானப் பயணம் வழங்குகிறது. இச்சலுகையைப் பெற நாளை நள்ளிரவு (25-02-17) வரை முன்பதிவு செய்தால் மட்டுமே பெறமுடியும். அவ்வாறு முன்பதிவு செய்பவர்கள் ஏர்பர் 27 வரையிலான பயணத்துக்கு இந்த சலுகை பொருந்தும்.

ஸ்ரீநகர் - சண்டிகர் மற்றும் அகர்தலா - கவுகாத்தி ஆகிய வழித்தடங்களுக்கு குறைந்த கட்டணமாக ரூ.777 வசூலிக்கப்படுகிறது. அதேபோல, சென்னை - ஹைதராபாத் வழித்தடத்திற்கான பயணத்துக்கு ரூ.999 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இச்சலுகையைப் பெற இண்டிகோ இணையதளத்தில் சென்று டிக்கெட் முன்பதிவு செய்யலாம். டிக்கெட் கவுண்ட்டர்களிலும், டிக்கெட் பதிவு ஏஜென்ட் நிறுவனங்கள் மூலமும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். முன்னதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனமும் இதேபோல, 777 ரூபாயில் விமானப் பயணம் வழங்கும் சிறப்புத் திட்டம் ஒன்றை அறிவித்திருந்தது. அதனுடன் போட்டியிடும் விதமாகவே இண்டொகோ நிறுவனம் இச்சலுகையை அறிவித்துள்ளது.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon