மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 7 ஆக 2020

ஜெயலலிதாவும் நானும் : சிறையில் சசிகலா எழுதும் சுயசரிதை!

ஜெயலலிதாவும் நானும் : சிறையில் சசிகலா எழுதும் சுயசரிதை!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனைப் பெற்று சிறையில் இருக்கும் சசிகலா தனது பழைய நினைவுகளை குறிப்பெடுக்கத் துவங்கியுள்ளதால் சுயசரித்திரம் எழுத திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.

அதிமுக பொதுச்செயலாளரும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா தோழியான சசிகலா, சொத்துகுவிப்பு வழக்கில் சிறைத்தண்டனைப் பெற்று , கர்நாடக மாநிலம், பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார், சிறைக்குள் இருந்தாலும் பிசியாகதான் இருக்கிறார். சில நேரங்களில், தனிமை, மௌனம், அமைதி, சிந்தனையுமாக இருந்து வருகிறார். சில நேரங்களில் பழைய நினைவுகள், ஜெயலலிதாவுடன் இருந்த இன்ப, துன்பங்கள், கட்சி வளர்ச்சிக்கு தனது பங்களிப்பு என்று யோசனையில் இருந்தவர், சில நாட்களாக பழைய நினைவுகளை குறிப்பெடுக்கத் துவங்கி விட்டாராம் சசிகலா. சிறை வாழ்க்கை முடியும்போது சசிகலா எழுதிய சுயசரித்திரம் புத்தகமா வரவிருக்கிறதாம். அதில், பரப்பன அக்ரஹாரா சிறை அனுபவங்களும் ஏராளமாக இடம்பெறுமாம்.

வியாழன், 23 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon