மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 15 ஆக 2020

ஜெ.பிறந்தநாள் : ஆர்வம் காட்டாத நிர்வாகிகள் !

ஜெ.பிறந்தநாள் : ஆர்வம் காட்டாத நிர்வாகிகள் !

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, உயிரோடு இருந்தபோது அவரது பிறந்த நாளை கொண்டாட மூன்றுமாதத்துக்கு முன்பே சுவர் விளம்பரம் செய்ய இடம்பிடித்து வெள்ளையடிக்கு வேலைகள் ஜரூராக நடந்துவரும். மாவட்டந்தோறும் ஆலோசனை கூட்டம் போட்டு பிறந்த நாள் விழா கொண்டாட்டம் நடைபெறும். பிப்ரவரி 24ஆம் தேதி கோயில்களில் பூஜை செய்வது, யாகம் செய்வதும், பால் குடம் தூக்குவது, காவடி தூக்குவது, அலகு குத்துவது, அண்ணாதானம் செய்வது, இரத்ததானம் செய்வது என்று அதிமுகவினர், கட்சி பொறுப்பாளர்கள், ஒன்றிய நகர, மாவட்ட, நிர்வாகிகள், எம்.எல்.ஏ, அமைச்சர்கள் என அனைத்துத் தரப்பினரும் விழாக்கோலமாக பெரும் அமர்க்களப்படுத்துவர்.

இந்நிலையில், ஜெயலலிதா மறைந்த 60-வது நாளில், 69வது பிறந்த நாள், இன்று பிப்ரவரி 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆனால் இன்றுவரையில் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை கொண்டாடும் வகையில் எந்தவிதமான ஏற்பாடுகளும் செய்யவில்லை என்று அதிமுக, கடலூர் மாவட்ட அவைத் தலைவர் ஐய்யப்பன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் ஒ.பி.எஸ், பக்கம் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ, எம்.பி.கள் என்று 115 பேர் இருக்கிறார்கள், அதுக்கான பட்டியல் என்னிடம் உள்ளது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவல் பலன் பெற்றவர்கள் சுகம் கண்டவர்கள், அம்மா மறைந்த 60 நாளில் மறந்துவிட்டார்கள், அவர்களை அம்மா ஆத்மா நிச்சயம் மன்னிக்காது என்றார்.

வியாழன், 23 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon