மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 15 ஆக 2020

ஐந்து நாளிலேயே அமைச்சரவையில் மாற்றம் : நிதியமைச்சரானார் ஜெயக்குமார்

ஐந்து நாளிலேயே அமைச்சரவையில் மாற்றம் :  நிதியமைச்சரானார் ஜெயக்குமார்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கவனித்து வந்த நிதி இலாகா, மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமாருக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்து ஆளுநர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவையில் முதல் மாற்றமாக, முதல்வர் கவனித்து வந்த நிதித் துறையானது மீன்வளத்துறை அமைச்சராக உள்ள டி.ஜெயக்குமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், திட்டங்கள், நிர்வாக சீர்திருத்தங்கள் துறையும் ஜெயக்குமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து, அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, புதிதாக நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரே தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதித்துறை அமைச்சராக ஜெயக்குமார் பொறுப்பேற்றாலும், அவர் முன்னதாக கவனித்து வந்த மீன்வளத்துறையையும் கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் எனவும் ஆளுநர் மாளிகையின் செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.

முதல்வர் பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை கடந்த 18ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பின்னர் 5 நாட்களுக்குள்ளேயே ஏற்பட்டுள்ள முதல் மாற்றம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 23 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon