மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 15 ஆக 2020

தீபக்கை யாரோ தூண்டிவிடுகின்றனர்: வைகைச்செல்வன்

தீபக்கை யாரோ தூண்டிவிடுகின்றனர்: வைகைச்செல்வன்

அதிமுக தலைமைக்கு எதிராக ஜெஅண்ணன் மகன் தீபக் கருத்து தெரிவித்திருப்பது வியப்பாக உள்ளது. யாரோ அவரை தூண்டி விட்டுள்ளனர் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் கூறியுள்ளார்.

மறைந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் இன்று புதிய தலைமுறைக்கு அளித்த சிறப்பு பேட்டியில், ''போயஸ் இல்லம் எனக்கும், எனது சகோதரி தீபாவுக்கும் சொந்தமானது. அதிமுகவுக்கு ஓ. பன்னீர் செல்வம் தலைமை தாங்க வேண்டும். டி.டி.வி தினகரனுக்கு தலைமை ஏற்கும் தகுதியில்லை. இதை நான் ஏற்க மாட்டேன். அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்களும் ஏற்க மாட்டார்கள். பன்னீர் செல்வம் தலைமையை ஏற்றால், தினகரன் விட்டுக் கொடுப்பார் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இதற்கு அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் பதில் தெரிவிக்கையில் , அதிமுக தலைமைக்கு எதிராக யாரோ தீபக்கை தூண்டி விட்டுள்ளனர். மேலும் கருத்து வேறுபாடுகள் இருந்தால் பேசித் தீர்த்துக்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வியாழன், 23 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon