மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 5 ஏப் 2020

அமைதியா வேடிக்கை பாருங்க : கமல் குதர்க்கம்!

அமைதியா வேடிக்கை பாருங்க : கமல் குதர்க்கம்!

கமல்ஹாசனின் நற்பணி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சிலர், ஒரு மாதத்துக்கு முன்பு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வன்முறையில் ஈடுபட்டதாக இப்போது கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். கமல்ஹாசனின் அதிரடி அரசியல் கருத்துக்களுக்கு எதிர்வினையாற்றும் செயலாக இதைக்கருதி, கமல் இந்தப் பிரச்னையை சீரியஸாகக் கையாண்டு வருகிறார்.

எக்கட்சி அரசேற்றாலும் நம் பணி போதுநலம் காப்பதே. இக்கூலியில்லா வேலையை நம் ஆயுளுள்வரை செய்வோம். அவர் பலமுறை வருவா் போவர்.நிரந்தரம் நம்நாடு என்ற ட்வீட்டுடன் பிப்ரவரி 21ஆம் தேதியிலிருந்து டிவிட்டரில் காணப்படாத கமல், கைது செய்யப்பட்ட தனது இயக்கத்தினரின் நிலைகுறித்த அப்டேட்டுடன் மீண்டும் களம்கண்டார்.

சிறையில் சுதாகர் நலமாக உள்ளாரர் . விடுவிக்கும் முயற்ச்சியில் நமதியக்கத்தார் உறவினருடன் நானும் பேசினேன். இந்நாடக ஆசிரியரே மனம் மாறினால் நலம் என்ற ட்வீட்டை முதலாகப் பதிவு செய்தார். இப்போதெல்லாம் கமல் அவரது ட்விட்டர் ஃபாலோயர்களுக்கு புரிகிறதா? இல்லையா? என்பதைப்பற்றி மிகவும் கவலைப்படுகிறார். ஒவ்வொரு ட்வீட்டும் யாருக்கானது என்பதையும் உடனே தெரிவித்துவிடுகிறார். அப்படித்தான் மேற்கண்ட ட்வீட்டுக்கு எப்படியும் புரியவில்லை என பதில் சொல்வார்கள் எனத்தெரிந்து அது புரிந்தவர்க்கான செய்தி. புரியாதோர் விலகி நின்று வேடிக்கை பாரும். வேலை முடிந்தபின் போற்றலாம் அல்லது புரிதலின்றித் வழக்கம்போல் தூற்றலாம் என்ற ட்வீட்டைப் பதிவு செய்தார்.

இதற்கு முன்பு இனி மக்கள் நீதி நாடுகாக்கும். நான் கீச்சிடாமல் அடிநாதத்துடன் அடக்கி வாசிக்கவே நினைத்தேன். ஆனால் எம் இயக்கப் பொறுப்பாளரின் கைது பேசவைக்கிறது என்று கமல் பதிவு செய்த ட்வீட் நினைவிலிருப்பதால், அமைதியா வேடிக்கை பாருங்க என இப்போது கமல் சொல்லியிருப்பது கமலின் இன்னிங்ஸ் ஆரம்பம் என்பது போல இருக்கிறதாக நெட்டிசன்ஸ் சுவாரஸ்யத்துடன் அடுத்த ட்வீட்டுக்காகக் காத்திருக்கிறார்கள்.

வியாழன், 23 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon