மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 5 ஏப் 2020

கோவைக்கு இன்று மோடி வருகை : பலத்த பாதுகாப்பு!

கோவைக்கு  இன்று மோடி வருகை : பலத்த பாதுகாப்பு!

ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர ஆதியோகி சிலையை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை வருகிறார். பிரதமரின் வருகையையொட்டி கோவையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மகா சிவராத்திரியையொட்டி, நாளை வெள்ளிக்கிழமை இந்த 112 அடி உயரமுடைய ஆதியோகி சிவனின் முகத்தோற்ற பிரமாண்ட சிலை வெள்ளிங்கிரி மலைப்பகுதியில் உள்ள ஈஷா யோகா மையத்தில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு சிலையை திறந்துவைத்துப் பேசுகிறார். இந்த விழாவில் தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ், புதுச்சேரி மாநில கவர்னர் கிரண்பேடி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான், ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தராராஜே சிந்தியா, ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்பட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள்.

விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி, டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் நாளை மாலை 5.20 மணிக்கு கோவை வருகிறார். பின்னர், அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் ஈஷா யோகா மையத்துக்குச் செல்கிறார். விழா முடிந்ததும் ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி கோவை விமான நிலையம் வந்து அங்கிருந்து தனி விமானம் மூலம் இரவு 9 மணிக்கு டெல்லி செல்கிறார்.

ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலை திறப்பு விழா முடிந்தபின்னர், மறுநாள் 25ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பாஜக மூத்த தலைவர் அத்வானி கோவை வருகிறார். அவர் 27ஆம் தேதி வரை ஈஷா யோகா மையத்தில் தங்கியிருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை வரும் மோடிக்கும் பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவையை சுற்றி பாதுகாப்புப் பணியில் சுமார் 5,000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வியாழன், 23 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon