மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 16 ஜன 2021

மாறுகிறார் தலைமைச் செயலாளர் ?

மாறுகிறார் தலைமைச் செயலாளர் ?

தலைமைச் செயலாளர் பதவியும், உளவுத்துறை அதிகாரி பதவியும், முதல்வர் பதவி போலாகிவிட்டது. புதிய ஆட்சி அமைத்த ஒன்பது மாதங்களில் மூன்று முதல்வர்கள் பதவியேற்று விட்டார்கள் தமிழகத்தில், இன்னும் வரும் மூன்று மாதத்துக்குள் முதல்வர் மாறலாம் என்று அதிமுக-விற்குள்ளே பரவலாக பேசுகிறார்கள்.

கடந்த ஒன்பது மாதத்தில் தலைமைச் செயலாளர்கள் இருவர், உளவுத்துறை அதிகாரிகள் இருவர் என மாறிவிட்டார்கள், இந்நிலையில்தான் புதியதாக பொறுப்பேற்றுள்ள தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மாற்றம், நிதித்துறை செயலாளர் சண்முகத்துக்கு தலைமைச் செயலாளர் பதவிக்கு வாய்ப்புகள் என்று செய்திகள் பரவியது.

அதையடுத்து, இதுகுறித்து நாம் தலைமை செயலகத்தில் விசாரித்தோம், தற்போது தலைமைச் செயலாளர் மாற்றத்துக்கு வாய்ப்புகள் இல்லை, கிரிஜாவுக்கு டைம்கொடுத்து டெஸ்ட் பண்றாங்க, முழு ஒத்துழைப்பு கொடுத்தால் நீடிக்க வைப்பாங்க. ஒத்துவரவில்லை என்றால் நிச்சயம் மாற்றுவாங்க என்றார்கள் உறுதியாக. தற்போதைய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மிகவும் கண்டிப்புடன் கூடிய நேர்மையான அதிகாரி என்பதால், நீட்டும் இடத்தில் கையெழுத்துப்போட யோசிக்க கூடியவர் என்பதால் ஓரிரு மாதங்களில் மாற்றம் தெரியும் என்கிறார்கள் தலைமை செயலக வட்டாரத்தில்.

வியாழன், 23 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon